×

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிப்பு: ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன்: ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே கடந்த வெள்ளியன்று காலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் புரட்சிகர ராணுவப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும் துணை தளபதி ஹசீத் அல் ஷாபியும் உயிரிழந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈராக் நாடாளுமன்றத்தில் அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 “ஈராக்கில் மிகவும் விலையுயர்ந்த விமான தளத்தை கொண்டுள்ளோம். அதனை கட்டுவதற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. நாங்கள் வெளியேறினால் அதற்கான இழப்பீட்டை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றினால் முன்னெப்போதும் பார்த்திராத வகையில் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார். இதனிடையே, நாளை மறுநாள் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷெரிப் இருந்த நிலையில், விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. இது மேலும், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : countries ,US ,UN ,Foreign Minister Increase ,Iranian ,Foreign Minister , Increase in tension between Iran-US: UN Iranian Foreign Minister denies visa to attend meeting
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...