×

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை :வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.    வெப்பநிலையை பொறுத்தவரை  31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags : districts ,Chennai Meteorological Department Rainfall ,Tamil Nadu , Speed change, meteorological station, rainfall, temperature
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை