×

பரமக்குடி ரயில் பாலத்தில் விளக்குகளை சேதப்படுத்தும் குடிமகன்கள்: போலீசார் நடவடிக்கை தேவை

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே மேம்பலத்தில் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக வைக்கப்பட்டிருந்த ஒளிரும் விளக்குகளை சேதபடுத்தி உடைக்கும் சமூக விரோதிகள், இரவு நேரங்களில் பாராக பயன்படுத்தும் குடிமகன்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பரமக்குடியில் ராமேஸ்வரம்-மதுரை ரயில் பாதை முதுகுளத்தூர் சாலையின் குறுக்கே சென்றதால், ரயில் வரும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் ரயில் பாதையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றதால், முதுகுளத்தூர் சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தில்  வாகனங்களில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக தடுப்புச்சுவர் பகுதிகளில் கருப்பு கோடுகள் வரையப்பட்டு, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது, முதுகுளத்தூர் செல்லும் போது வலதுபுறத்தில் உள்ள ஒளிரும் விளக்குகள் சமூக விரோதிகளால் உடைத்து சாலையில் கண்ட இடங்களில் சிதறிகிடக்கிறது. இரவு நேரங்களில் பாலத்தீன் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள், ஸ்டாண்டிங் பாராக பயன்படுத்தி வருகின்றனர். கும்பலாக வரும் இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, வண்டியில் இருந்துகொண்டே குடித்து வருகின்றனர். குடித்து முடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து சிதறவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால், பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களை பதம்பார்த்து வருகிறது. இரவு பணியில் உள்ள போலீசார் வரும்போது இயல்பாக நடத்து கொள்ளும் சமூக விரோதிகள் பல குற்றச்சம்வபங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கவேண்டிய அதிகாரிகள் உடனடியாக அரசின் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியின் போது, ரயில் பாலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பரமக்குடி பாபு கூறுகையில், “ரயில் பாலத்தில் சமூக விரோதிகள் குடிப்பதும், குடிபோதையில் அங்குள்ள ஒளிரும் விளக்குகளை உடைத்து சாலையில் எறிவதுமாக இருக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வது பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வெளியில் இருந்து வரும் நபர்கள் வெளிச்சம் இல்லாமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வெளியிலிருந்து வரும் நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஆகையால், போலீசார் சமூக விரோதிகள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Citizens ,railway bridge ,Paramakudi , Paramakudi Railway Bridge, Lighting, Citizens
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...