×

ஜேஎன்யூ பல்கலைக்கழக தாக்குதலுக்கு ஹிந்து ரக் ஷாதளம் அமைப்பு பொறுப்பேற்பு :தேசவிரோத நடவடிக்கைகள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை

டெல்லி : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹிந்து ரக் ஷாதளம் (hindu raksha dal) அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், உருட்டுக் கட்டைகளுடன் வந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

ஆலோசனைக்க கூட்டத்தில் கலவரம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை(ஜேஎன்யு) கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதோடு, புதிய வரைவு கொள்கைகள் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனிடையே,  ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் உள்ள கம்பியூட்டர் சர்வர் அறை சூறையாடப்பட்டது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் யூனியன் மற்றும் பல்கலை நிர்வாகம் இடையே பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், பேராசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல்கலை வளாகத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கலவரம் வெடித்தது. இடதுசாரி மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். ஏபிவிபி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதில் பல்கலை மாணவர் சங்க தலைவர் அசி கோஷின் மண்டை உடைந்தது. இதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட சக மாணவர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும், தடி, இரும்பு கம்பிகள் மற்றும் சுத்தியலுடன் பல்கலை வளாகத்தை சுற்றிலும் நின்றுக்கொண்டு முகமூடி அணிந்தவர்கள் கற்களை கொண்டு தாக்கினர். அதுமட்டுமின்றி ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். ஆனால், தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர் கூறினர். இதையடுத்து பல்கலைக்கழகத்தின் நிலவரம் தொடர்பாக அதன் பதிவாளர் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து ரக் ஷாதளம் (hindu raksha dal) அமைப்பு பொறுப்பேற்பு

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று ட்விட்டரில் ஹிந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி செளதரி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர்,
தேசவிரோத, ஹிந்து விரோத நடவடிக்கைகள் நடைபெற்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தேச விரோத நடவடிக்கைகள், வேறு எந்த பல்கலைக்கழகங்களில் நடைபெற்றாலும் அங்கும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த விடியோ குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிங்கி, ஜேஎன்யூ தேச விரோத சக்திகளின் தலமாகி விட்டதாகவும் அதனை தங்களால் சகித்துக் கொள்ள முடிவில்லை என்றும் கூறினார். தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியதாகவும்  தாக்குதலுக்கான முழு பொறுப்பை தாங்களே ஏற்பதாகவும் கூறியிருக்கிறார். 


Tags : Rukhthalam ,attack ,organization ,JNU University ,Hindu Rukh Shalal , Hindu Rak Shadalam, Responsible, Jawaharlal Nehru, Attack, Delhi
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...