×

திம்பம் மலைப்பாதையில் காரை யானை கவிழ்த்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் நின்ற காரை யானை கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ம்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி,  மான், காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த  வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம்  மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள்  இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு 5வது கொண்டை ஊசி  வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் நடமாடி கொண்டிருந்தது.

அப்போது சாலையில்  செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு முயற்சி செய்தது. யானையின் அருகே சென்று  நின்ற ஒரு காரை யானை துரத்தியதால், காரில் சென்ற நபர்கள் அச்சமடைந்தனர்.  காரின் முன்புறம் நோக்கி வந்த யானை காரின் முன்பகுதியில் முட்டியதால்  கார் கவிழ்ந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக யானையை துரத்திவிட்டு  கவிழ்ந்த காரை தூக்கி நிறுத்தி காரில் இருந்தவர்களை காப்பாற்றினர். நின்ற நிலையில் கார் கவிழ்ந்ததால் காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. மலைப்பாதையில் யானைகள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த  கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : hill , Thimpam Mountain Pass, Elephant
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்