×

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை : குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின் இதனை அவர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் நிகழ்வு சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கூட்டத் தொடரின் போது, அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். மேலும் தாம் கொடுத்துள்ள தனி நபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் எதிராக உள்ளதாக ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

இதையடுத்து ஸ்டாலின் கொடுத்துள்ள தனி நபர் தீர்மானம் ஆய்வில் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பதில் அளித்தார். ஆய்வில் உள்ள தீர்மானத்தை உடனே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்த முடியாது என்று ஸ்டாலினிடம் சபாநாயகர் கண்டிப்புடன் தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில்,பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல.நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தி அடைவோம், என்றார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்புச் செய்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மஜக.எம்எல்ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர்.  

ஸ்டாலின் பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்றும் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பிஜேபி ஆளும் அசாம் மாநிலத்திலேயே குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேட்டி

ஸ்டாலினை தொடர்ந்து,  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவோம் என்றும் மீண்டும் மீண்டும் சட்டப்பேரவையில் இந்த பிரச்னையை எழுப்பி பேசுவோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய ராமசாமி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு ஏன் மறுக்கிறது என்று தெரிவில்லை எனவும் எடுத்துரைத்தார்.


Tags : DMK ,Stalin ,opposition leader , Legislature, Governor, if panvaril Purohit, Speaker, Mr. Dhanapal the silent tribute, mourned Stalin, DMK, Vail
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...