×

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதன் எதிரொலி : இந்தியாவில் எரிபொருள் விலை 6வது நாளாக தொடர்ந்து ஏறுமுகம்

டெல்லி : மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து இருப்பதன் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் விலை 6வது நாளாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஈரான் தளபதி சுலைமாணியை அமெரிக்கா குண்டு வீசி கொன்றுவிட்டதால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிர் ஒலிப்பதால் கடந்த 6 நாட்களாக எரிபொருள் விலை மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.69 காசுகளை விற்பனை ஆகிவருகிறது.இது நேற்றைய விலையை விட 5 காசுகள் கூடுதலாகும். டீசல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 72.69 காசுகளுக்கு வர்த்தகம் ஆகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணியும் வரை எரிபொருள்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை 6வது நாளாக அதிகரித்துள்ளது. . 6 நாளில் பெட்ரோல் 57 காசு, டீசல் 83 காசு உயர்ந்துள்ளது.


Tags : India ,Middle East , War, clouds, fuel, price, sunroom, Iran, commander, petrol, diesel, price
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!