×

முகநூலில் அகதிகள் குறித்து தவறான பதிவு: அசாம் என்ஆர்சி அதிகாரி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி:  அகதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பதிவிட்டதாக எழுந்த குற்றச் சாட்டுகள் தொடர்பாக அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்ற கண்காணிப்பின் கீழ் அசாமில் தேசிய குடிமக்கள்  பதிவேடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹிதேஷ் தேவ் சர்மா என்பவரை நீக்க கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டனர்.  இந்த வழக்குகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஹிதேஷ் தனது முகநூல் பக்கத்தில் அகதிகள் குறித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தவறான பதிவுகளை பதிவிட்டிருப்பதாக வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதுகுறித்து அசாம் மாநில அரசும்,  ஹிதேஷ் தேவ் சர்மாவும் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெற்றோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டாலும், அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று சில பொதுநல அமைப்புகள் முறையிட்டனர். இவைக்குறித்தும் விசாரிக்கப்பட்டுவருவதாக பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படமாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.


Tags : Assam NRC ,Supreme Court , Face, Refugees, Assam, NRC, Directive
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை...