×

சென்னையில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக தகவல் அளித்த ஸ்கேன் சென்டர் உரிமையாளர் கைது

சென்னை: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து முன்கூட்டியே தகவல் அளிப்பது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்திருந்தும் இன்னும் சில பகுதிகளில் அவை தொடர்ந்து நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கு உதவி செய்து வந்த ஸ்கேன் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். வேளச்சேரி, தரமணி சாலையில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டரில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை முன்கூட்டியே தெரிவித்து கருக்கலைப்புக்கு உதவி செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஒரு கர்ப்பிணி பெண்ணை அனுப்பி புகாரை உறுதிப்படுத்திய காவல்துறையினர் ஸ்கேன் சென்டரின் உரிமையாளர் சிவசங்கரை கைது செய்தனர்.

இதையடுத்து மையத்தில் இருந்த கருவிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் எம்.எஸ்.சி பட்டதாரியான சிவசங்கர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் அனைவரும் வேலையை விட்டு சென்ற பின்னரும் அதே பெயரில் தொடர்ந்து மருத்துவமனையை நடத்தியதும், பணம் பெற்றுக்கொண்டு கருக்கலைப்பு செய்ய சில மருத்துவர்களிடம் கர்ப்பிணிகளை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கு உதவி செய்த ஸ்கேன் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


Tags : owner ,Chennai ,scan center ,fetus , Chennai, fetus, infant, sex, illegal, information, scan center owner arrested
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...