×

கல்பாக்கத்தில் 2 அணு உலைகள் நிறுத்தம் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்

சென்னை: கல்பாக்கத்தில் 2 அணு உலைகள் நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் செயல்படும் சென்னை அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் 440 மெகாவாட் மின்சாரம் பெரும்பாலும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். மீதமுள்ள மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாநிலம் வாரியாக தேவைக்கேற்ப பகிர்ந்து அனுப்பப்படும்.

கடந்த 2018 ஜனவரி 22ம் தேதி முதலாவது அணு உலை தொழில்நுட்பக் கோளாறால் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் உள்ள அணுசக்தி துறை சார்ந்த பல்வேறு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் வந்து பழுதான அணு உலையை சரி செய்ய முயன்றும் இதுவரை சரி செய்ய முடியவில்லை. இந்நிலையில், மற்றொரு அணு உலையான 2வது அணு உலையும் நேற்று மாலை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. இந்த 2வது அணு உலையின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஜனவரி 13ம் தேதி உற்பத்தியை தொடங்கும் என அணு மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே முதலாவது அணு உலை இயங்காத நிலையில், தற்போது இயங்கி வந்த  2 வது அணு உலையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு  ஏற்படும் அபாய நிலை உள்ளது.

Tags : reactors ,Kalpakkam 2 ,Kalpakkam , Kalpakkam, 2 reactors, parking, Tamilnadu, power station
× RELATED கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில்...