×

அகில இந்திய தொழிலாளர் போராட்டம் மதிமுக முழு ஆதரவு: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை - தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகளின் ஆதரவுச் சட்டங்களாக மாற்றாதே, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய் ஆகிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக 2020 ஜனவரி 8ம் நாள் (நாளை) நடைபெற இருக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மதிமுக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

Tags : All India, Labor, Struggle, Mathimukha, Vaiko
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...