×

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி எதிரொலி மு.க.ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன் சந்திப்பு: பிப்ரவரியில் திமுகவில் இணைய திட்டம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சந்தித்து வாழ்த்தினார். பிப்ரவரியில் 2 லட்சம் தொண்டர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆளும் அதிமுக கூட்டணியைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து ராஜகண்ணப்பன் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைதொடர்ந்து திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். எனது தலைமையில் சுமார் 2 லட்சம் பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளோம். இந்த இணைப்பு விழா மதுரையில் மிக பிரமாண்டமாக வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும்.

Tags : Rajakannappan ,MK Stalin ,government ,election ,Rajkannappan , Local Elections, Big Win, MK Stalin, Rajagannappan, February, DMK, Internet Project
× RELATED பிரதமர் மோடி குன்னக்குடிக்கே...