×

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. கவர்னர் உரையை புறக்கணித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் திமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த மக்கள் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும், தொகுதி சார்ந்த பிரச்னைகளை எழுப்புவது குறித்தும் எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கினார். சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது.

Tags : DMK MLAs ,meeting ,MK Stalin DMK MLAs ,MK Stalin , MK Stalin, Leader, DMK, MLAs, meeting
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்