×

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் சென்னையில் கடந்த 8 ஆண்டில் போக்சோவில் 1000 பேர் கைது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு தகவல்

சென்னை: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை சார்பில் ‘காவலன்’ செயலி குறித்து போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்  பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறியதாவது:

பெண்கள் சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது. அந்தரங்க தகவல்களை பரிமாற கூடாது. தற்போது சிறார் பாலியல் சம்பந்தமான படங்களை பதிவிறக்கம் செய்த 2 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர்  தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ‘காவலன்’ செயலி மூலம் இதுவரை 25 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரம் குற்றவாளிகள் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தி வருவதால் போக்சோ குற்றங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. அதேபோல், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து பெண்கள் கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Prevention Unit against Women and Children 1000 ,children , Girls, rape, Chennai, 8 year m poxo m 1000 people arrested
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்