×

தேர்தல் விதியை மீறிய வழக்கில் வெற்றிவேல் மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் விதியை மீறிய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அப்போதைய அதிமுக வட சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்த, வெற்றிவேல் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் விதியை மீறியதாக வெற்றிவேல் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஜெயபால் என்பவர் புகார் அளித்தார். வெற்றிவேல் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.ரமேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் வெற்றிவேல் ஆஜராகினார். அவரிடம் நீதிபதி, அவர் மீதான குற்றச்சாட்டை வாசித்து காண்பித்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 21ம் தேதிக்கு வழக்கு விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags : Electoral Rule, Case, Success
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...