×

வரும் 9ம் தேதி திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்

சென்னை, ஜன.7: திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிவிப்பு: திமு.க மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும். இணை- துணைச் செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ., பூவை சி.ஜெரால்டு, மன்னை த.சோழராஜன், ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, எஸ்.மோகன், சேலம் ரா.தமிழரசன், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், வீ.கவிகணேசன், எம்.ஏ.எம்.ஷெரீப், அதலை பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இதில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நடைபெற உள்ள போராட்டம், புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதிய அமைப்புகள் ஏற்படுத்துதல், திமுக ஆக்கப்பணிகள் பொருள் குறித்து விவாதிக்கப்படும்.

Tags : DMK ,student team organizers , On the 9th, DMK student team and organizers meeting
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி