×

குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் பதவி அதிமுகவில் கோஷ்டி மோதல்: போலீசாரிடம் வாக்குவாதம்

வடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அதிமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மனைவி கலையரசி வடக்குத்து 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். குள்ளஞ்சாவடி அதிமுக பிரமுகர் ஏகேஎஸ் மனைவி குணசுந்தரி 11வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தரப்பினரும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்களை தக்கவைப்பதில் மும்முரம் காட்டி வந்தனர். மேலும் இருதரப்பினரிடையே போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை கலையரசி தனக்கு ஆதரவாக உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்களையும் ஒரே வாகனத்தில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்துவந்து பதவி ஏற்பு விழா முடிந்ததும் மீண்டும் அனைவரையும் வாகனத்தில் அழைத்து சென்றார். இதனையறிந்த அதிமுகவின் மற்றொரு தரப்பினர் கவுன்சிலர்களை கலையரசி கடத்தி சென்றதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினரிடையே தலைவர் பதவியை பிடிக்க கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Coalition clash , Kurinjipadi, union leader, AIADMK, factional confrontation, police, argument
× RELATED கோவை அருகே கோஷ்டி மோதல்; 4 பேர் காயம்