×

மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை செழியன்  எம்எல்ஏ, திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் கவி.கணேசன்  உள்ளிட்ட  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  பாதுகாப்பு பணியில் வடக்கு கடற்கரை  போலீசார் ஈடுபட்டனர்.


Tags : demonstration ,Student Federation , Student Federation, demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்