×

பிளெமிங்கை முந்தினார் டெய்லர்

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் ராஸ் டெய்லர் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் நேற்று அவர் 22 ரன் எடுத்தார். இதுவரை 99 டெஸ்டில் விளையாடியுள்ள டெய்லர் 7174 ரன் குவித்து (அதிகம் 290, சராசரி 46.28, சதம் 19, அரை சதம் 33) முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்கை (7172 ரன், சராசரி 40.06) 2வது இடத்துக்கு தள்ளினார். பிரெண்டன் மெக்கல்லம் (6453 ரன், சராசரி 38.64), கேன் வில்லியம்சன் (6379 ரன், சராசரி 51.44), மார்டின் குரோவ் (5444 ரன், சராசரி 45.36) அடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags : Fleming Taylor ,Fleming , Taylor overtook, Fleming
× RELATED சீனாவின் தொழில்நுட்ப பயன்பாட்டால்...