×

ரஞ்சி கோப்பை தமிழகம்-உ.பி. டிரா

கான்பூர்: தமிழகம் - உத்தரப் பிரதேசம் அணிகளிடையே நடந்த ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தி நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 2ம் நாள் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீச, தமிழகம் முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய உ.பி. அணி 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்திருந்தது.

கடைசி நாளான நேற்று அந்த அணி 175 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. 5 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 54.5 ஓவரில் 154 ரன்னுக்கு சுருண்டது. அபராஜித் 53, கேப்டன் விஜய் ஷங்கர் 28, கவுஷிக் காந்தி 22, சாய் கிஷோர் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.  இதையடுத்து, 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணி 7.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. உ.பி. அணி 1 புள்ளியுடன் திருப்தியடைந்தது.

Tags : Ranji Trophy , Ranji Trophy ,UP Drawn
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!