×

நடிகர்கள் கண்டனம்

மும்பையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் கூறுகையில், “ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சியை பார்த்தவுடன் நான் அமைதியிழந்துவிட்டேன். நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. நடந்த சம்பவம், கண்டனத்துக்குரியது. வன்முறையினால் எதையும் கொண்டு வரமுடியாது’’ என்றார்.
இதேபோல் நடிகர் ஆலியா பட், ‘‘நாட்டின் பிரிவினை, ஒடுக்குதல் மற்றும் வன்முறையை தூண்டும் சித்தாங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். நடிகர் ஆதித்யா ராய் கபூர்,  ‘‘நமது நாட்டில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இதனை செய்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

நடிகை சோனம் கபூர் தனது டிவீட்டில், “காட்டுமிராண்டித் தனமான இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்றுமறியாதவர்களை தாக்க விரும்பும்போது குறைந்தபட்சம் உங்களது முகத்தையாவது காட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் தாக்குதல் தொடர்பான வீடியோவை இணைத்துள்ள அனுராக் காஷ்யாப், ‘‘இந்துத்துவா தீவிரவாதம் தற்போது முழுமையாக வெளிப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். ‘‘மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நெஞ்சை உறையவைப்பதாக இருக்கிறது’’ என்று நடிகர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். ‘‘மாணவர்களை காட்டிலும் மாடுகள் பாதுகாப்பாக இருக்கின்றன’’ என்று டிவிங்கிள் கண்ணா கூறினார். நடிகர்கள் ஸ்வாரா பாஸ்கர், சபானா ஆஸ்மி, ரிச்சா சத்தா, முகமத் ஜீசான் ஆயூப் மற்றும் டாப்சி பன்னு, எழுத்தாளர் கவுரவ் சோலாங்கி மற்றும் தயாரிப்பாளர்கள் அபர்ணா சென், விஷால் பரத்வாஜ் மற்றும் அனுபவ் சின்கா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Actors , Actors condemned
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி