×

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: காவிரி நதியில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுத்தி வருவதை இம்மாதம் 30ம் தேதிக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் தலைகாவிரியில் உற்பத்தியாகி பாயும் காவிரி நதியில், குடகு மாவட்டத்தில் உள்ள பாகமண்டலா மற்றும் மடிகேரி ஆகிய பகுதியில் இருந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து விடுவதால் புனிதமான காவிரி நதியில், மாசு படிந்து வருகிறது. ஆகவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி ெபாதுநல மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனு ேநற்று தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், காவிரி நதியில் எவ்வாறு கழிவுநீர் கலக்கிறது, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை புள்ளி விவரமாக எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இயற்கை செல்வங்களை காப்பாற்றினால் தான் இக்கால தலைமுறையினர் மட்டுமில்லாமல் எதிர்கால தலைமுறையினரையும் காப்பாற்ற முடியும். காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சுத்தம் இன்றி காணப்படும் கரைகளை ஜனவரி 30க்குள் தூய்மைப்படுத்த வேண்டும். இதுபறறிய  அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Karnataka ,Kaveri ,Government ,Icort , prevent sewage mix , Kaveri,highcourt order, Karnataka Government
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...