×

கடந்த 2014-15ம் ஆண்டில் 1,038 கோடி கருப்பு பணம் ஹாங்காங்குக்கு மாற்றம் : சென்னையை சேர்ந்தவை உட்பட 51 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: கடந்த 2014-15ம் நிதியாண்டில் 1,038 கோடி அளவுக்கு கருப்பு பணம் வங்கிகள் மூலமாக ஹாங்காங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 51 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை ஹாங்காங் அனுப்புவதற்காக பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 48 நிறுவனங்கள் 51 நடப்பு கணக்குகளை தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் ஹாங்காங்குக்கு  1,038.34 கோடி அளவுக்கு கருப்பு பணம் கடந்த 2014-15ம் நிதியாண்டில் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. மொத்தம் 51 நிறுவனங்கள் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சென்னையைச் சேர்ந்தவர்களின் நிறுவனங்கள். 24 வங்கி கணக்குகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்பணம் என்ற பெயரில் 488.39 கோடி அளவுக்கு நிகரான தொகை அமெரிக்க டாலர்களுக்காக கடந்த 2014-15ம் நிதியாண்டில் செலுத்தப்பட்டுள்ளது.

27 வங்கி கணக்குகள் மூலம் 549.95 கோடி மதிப்பிலான தொகை, இந்திய சுற்றுலா பயணிகளின் வெளிநாட்டு பயணம் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக முகமது இப்ரம்ஸா ஜானி, ஜிந்தா மிதர் மற்றும் நிசாமுதீன் மற்றும் 48 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இறக்குமதி என்ற பெயரில் பணம் அனுப்பிய நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் மட்டும் சிறிய அளவில் இறக்குமதி செய்துள்ளன. ஆனால் அவர்கள் இறக்குமதி செய்த பொருளுக்கும், அனுப்பிய பணத்திற்கும் தொடர்பு இல்லை. இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் பலர் லஞ்சம் பெற்றுள்ளனர்என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags : Hong Kong , 1,038 crore black money, transferred , Hong Kong
× RELATED மனிதர்களின் குரலை வைத்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆடுகள்