×

திம்பம் மலைப்பாதையில் உலா வந்த யானை காரை துரத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கிaன்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள் இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 5வது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களை துரத்த முயற்சி செய்தது. யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை யானை துரத்தியது. இதில் காரில் சென்ற நபர்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் காரின் முன் புறம் வந்து யானை காரை முட்டி நின்றது. காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை பின்புறம் நோக்கி நகர்த்தி லாவகமாக தப்பினர். மலைப்பாதையில் யானைகள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Elephant
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்