×

சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி

பேரையூர்: பேரையூர் தாலுகா, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காளைகள் வளர்ப்போர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவிழாக்காலங்களில் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். பாப்பிநாயக்கன்பட்டி, எழுமலை, எ.கோபாலபுரம், சின்னக்கட்டளை, மங்கல்ரேவு, வலையபட்டி, எ.கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். சில நாட்களில் அனுமதி வழங்கப்படாத நிலை ஏற்படும்போது ஜல்லிக்கட்டுநடைபெறும் நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டு நடைபெறும்.

சேடபட்டி, சின்னக்கட்டளை, குப்பல்நத்தம், வலையபட்டி, எழுமலை, பாப்புநாயக்கன்பட்டி, டி.கல்லுப்பட்டி, சோலைப்பட்டி, கொட்டாணிபட்டிநல்லமரம், வையூர், எம்.கல்லுப்பட்டி, எழுமலை, டி.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பெரிய அளவில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டுக்கு இப்பகுதி காளைகள் கலந்து கொள்ளும். அதற்காக தற்போது காளைகளுக்கு தண்ணீரில் நீந்த வைத்தும், மண்ணை குத்த வைத்தும், காளை வாடிவாசலில் வெளியேறும்போது, காளைபிடி வீரர்கள் அணையும்போது, காளைகளின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து காளைகளை தங்கள் வசம் வைத்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வரும் சேடபட்டியைச் சேர்ந்த லெட்சுமி கூறும்போது, ‘நாங்கள் எங்கள் காளையை எங்க வீட்டுத் தெய்வமாக நினைத்துதான் வளர்த்து வருகிறோம். அதற்கான இரை பருத்தி விதைகள், உள்ளிட்ட சத்தான உணவு கொடுத்து காளையின் தகுதியை உயர்த்தி வருகின்றோம். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் ஜெயித்து வரும்போது எங்கள் குலசாமியே ஜெயித்து வருவதாக நினைக்கிறோம். எங்கள் ஜல்லிக்கட்டுகாளை மற்றவர்களுக்கு பயம்தான், ஆனால் இது எங்கள் வீட்டிலுள்ள ஒரு குழந்தை அதனுடைய பசியறிந்தும், தண்ணீர் எப்போது வேணும் என்பதனையும் எங்களுக்கு எங்கள் காளையே உணர்த்தி தெரியப்படுத்தும். எங்களுக்கு நமது காளைக்கு என்னதேவை என்பதனையும் அறிந்து நமது தமிழர் பாரம்பரியம் மாறாமல் வளர்த்து வருகிறோம்’ என்றார்.

இதேபோல் சேடபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘பயிற்சியின்போது, ஜல்லிக்கட்டுகாளையானது தனது கோபத்தை வெளிப்படுத்தும், காளை வளர்ப்பவர்களுக்கு தங்களது காளை நிலையை அறிந்து கொள்வார்கள். மேலும் காளைகளை சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் காளைகளை பிள்ளைகளைப்போல் வளர்த்து வரும் நிலையில், சில பெரிய ஜல்லிக்கட்டில் காளைகளை நீண்ட காக்க வைத்து, அதனை களைப்படையச் செய்து விடுகின்றனர். இதனால் காளைகள் ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்கள் பயிற்சி அளித்தும் பயனில்லாமல் போய்விடுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்தும், வாடிவாசல் நெருங்கும் முன்பே குறிப்பிட்ட நேரம் முடிந்து விட்டது என திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் காளை வளர்ப்போர் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் கமிட்டியாளர்களும், அதிகாரிகளும், கால்டை மருத்துவர்களும், இதனை உணர்ந்து இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு காளையின் நிலையினை உணர்ந்தும் காளை வளர்ப்போர்களின் சூழ்நிலையை உணர்ந்தும் பாரம்பரிய ஜல்லிக்கட்டுவவை நடத்த வேண்டும்’ என்றார்.

Tags : areas ,Sedapatti ,T.Kallupatti , Jallikattu
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்