×

உடன்குடியில் குழாய் உடைப்பால் தெருக்களில் ஆறாக ஓடும் குடிநீர்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடன்குடி: உடன்குடி காலன்குடியிருப்பு பெரிய தெருவில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பால் சாலைகளில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியதெரு ஜமாத் நிர்வாகி அபூ உபைதா, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு., உடன்குடி காலன்குடியிருப்பு பெரிய தெரு கீழசரக தெருவில் குடிநீருக்கான மெயின்குழாய் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடைந்து தண்ணீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.

இதனால் தெருக்களில்தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் குடிநீர் விநியோகமும் முறையாக விநியோகிக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Tags : streets , Immediacy, pipe breakage, drinking water, action
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...