×

குழந்தைகள் இல்லாத தீவு

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜெர்மனியில் வீற்றிருக்கிறது ஓலேண்ட் தீவு. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இங்கே மக்கள் வசிக்க ஆரம்பித்தனர். தீவிலிருந்து நகரத்துக்குச் செல்ல பிரத்யேகமான ரயில் பாதை கூட உள்ளது. அந்தப் பாதையில் செல்வதற்காக சிறிய வாகனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக குளிர்காலம் ஆரம்பித்தால் கடல் மட்டம் அதிகமாகி தீவே மூழ்கிவிடுகிறது.

தவிர, கடும் புயலும், வெள்ளப்பெருக்கும், கடல் உள்வாங்குவதும் அடிக்கடி அங்கே நிகழ்கிறது. இருந்தபோதிலும் தீவில் வாழும் மக்கள் வேறு இடத்தைத் தேடி எங்கேயும் போவதில்லை என்பது ஹைலைட். இங்கே மொத்தம் 52 வீடுகள் உள்ளன. ஆனால், வெறும் 16 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இதில் யாரும் குழந்தைகள் இல்லை. இதுபோக ஜெர்மனியின் மிகச்சிறிய கலங்கரை விளக்கம் கூட இங்குதான் உள்ளது.

Tags : Island ,children , Island.children
× RELATED பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி...