×

ட்ரம்ப் அதிகாரத்தை குறைக்க அமெரிக்க சபாநாயகர் கடிதம் : ஈரான் மீது தாக்குதல் பற்றி விவாதிக்கவில்லைப் என புகார்

வாஷிங்டன் : ஈரான் நாட்டுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றனர். ஈரான் நாட்டு தலைமை ராணுவ தளபதி காசி சுலைமாணியை அமெரிக்காக் கொன்றதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்த சூழலுக்கு அதிபர் ட்ரம்பின் ஆணவ போக்கை காரணம் என்று கூறி, அமெரிக்காவில் பல இடங்களில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடைய தன்னிச்சையாக போர் தொடுத்த அதிபர் ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கும் வகையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு, முடிவுகள் எடுக்காமல் அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக நான்சி கூறியுள்ளார்.


Tags : Speaker ,US ,Reduce Trump ,Iran , Iran, US, Speaker, Nancy Pelosi, Army Commander
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...