×

ரூ.132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: ரூபாய் 132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 36 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 காவல்துறை குடியிருப்புகள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் 9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடப்பட்டுள்ள பள்ளி கட்டடங்களையும், சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

மேலும், 86 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டடங்கள், 3 ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனக் கட்டடங்கள் மற்றும் ஒரு ஆசிரியர் இல்லக் கட்டடத்தையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் உபரி பணியாளர்கள் 491 பேருக்கு தமிழ்நாடு வாணிப கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்குவதன் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களுக்கு தேர்வான 564 பேருக்கு பணி ஆணைகளை வழங்கும் முகமாக 7 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


Tags : Palanisamy ,buildings ,state buildings , Rs 132 crore, valuation, government buildings, video display, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...