×

யாரும் என்னை அடைத்து வைக்கவில்லை.. நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. ஐகோர்ட்டில் ஆஜரான நித்தியானந்தா சீடர் விளக்கம்

சென்னை: நித்தியானந்தா சீடர் முருகானந்தத்தை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சீடர் முருகானந்தத்தின் தாயார் அங்கம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள பிடதி என்ற இடத்தில், நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ம் ஆண்டு, மனநல சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  

அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது.சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து 15 வருடங்களாக ஆசிரமத்தில் இருந்த அவரை, கடந்த 5 மாதங்களாக அவரது உறவினர்கள் பார்க்க முடியவில்லை. மேலும் ஆசிரம நிர்வாகமும் பிராணசாமியை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து முருகானந்தத்தை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர்  அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரியும்  

அவரது தாய் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் முருகானந்தத்தை ஆஜர்படுத்தபட்டார். அப்போது தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றதாக சீடர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும் யாரும் என்னை அடைத்துவைக்கவில்லை என்றும் நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன் என்றும் அவருடன் தான் பணியாற்றுவேன். தாயிடம் செல்ல விருப்பமில்லை என்று கூறினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Tags : Nobody ,disciple ,Nithyananda , Nithyananda, disciple, murugananda, plea, petition
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...