×

ராஜஸ்தான், குஜராத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 600 ஆக உயர்வு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், குஜராத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளது. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 100 குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்துவிட்டன.

இதனை போலவே ஜோத்ப்பூரிலுள்ள உமைர் மற்றும் எம்.டி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 150 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. பிட்னரில் உள்ள பி.பி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 124 குழந்தைகள் இறந்துவிட்டன. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டிசம்பர் 1ம் தேதி முதல் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 140ஐ எட்டியுள்ளது. அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 85 குழந்தைகள் இறந்துவிட்டன. இரண்டு மாநிலங்களில் ஒரே மாதத்தில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 600ஐ தாண்டியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Rajasthan ,Gujarat , Rajasthan, Gujarat, baby girl, death toll, number 600, rise
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...