×

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சியின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றசாட்டு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 30க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

Tags : Group 4 , Group 4, Abuse, Complaint, Investigation, DNPSC
× RELATED குரூப்-4 தேர்வு வினாத்தாள் குமரிக்கு...