×

தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு தயாராகும் ஊராட்சி மன்றங்கள்

உடுமலை:உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவிஏற்பு விழாவையொட்டி, ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்கள் பொலிவுபடுத்தப் பட்டுவருகின்றன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30ம் தேதிகளில் நடந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது.வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இன்று (6ம்தேதி) பதவி ஏற்க உள்ளனர். வரும் 11ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு உள்ளாட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அலுவலகங்களுக்கு புதிய வர்ணம் பூசும் வேலையும், மின் ஒயர்களை சரி செய்யும் பணியும் நடந்துவருகிறது. மன்ற தலைவரின் அறை, கூட்ட அரங்கு ஆகியவற்றை தயார்படுத்தும் பணியும் நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் ஊராட்சி செயலர்கள் இந்த பணியை மேற்கொண்டு ள்ளனர். இதனால் உள்ளாட்சி மன்ற அலுவலகங்கள் புதுப்பொலிவுபெற்று வருகின்றன. அலுவலகங்களுக்கு புதிய வர்ணம் பூசும் வேலையும், மின் ஒயர்களை சரி செய்யும் பணியும் நடந்து வருகிறது.


Tags : Panel booths , Panel booths,prepare , Chairman, Membership
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...