×

இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவு

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது இன்று அதிகாலை 5.18 மணி அளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags : Shimla ,Earthquake ,Himachal Pradesh , Shimla, mild earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்