×

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு: ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாக மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். இந்நிலையில் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்; குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக உயர்வு; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது கபடநாடகம் எனவும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ், டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு  செய்தனர்.


Tags : walkout ,DMK ,speech ,Governor ,party ,Assembly ,MK Stalin , Legislative Assembly, Governor's speech, DMK, walk
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி