×

கென்யா ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

நைரோபி: கென்யாவில் ராணுவ தளத்தின் மீது சோமாலியாவின் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கென்யா நாட்டின் கடலோர பிராந்தியமான லாமூவில், அந்நாட்டு ராணுவ தளம் அமைந்துள்ளது. இதை அமெரிக்கா, கென்யா பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப், இந்த ராணுவ தளத்தின் மீது நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. இதனிடையே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ராணுவ தளத்தின் ஒரு பகுதி அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது

Tags : Terrorists ,Kenyan , Kenya, military base, terrorists, attack
× RELATED 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை