×

ரூ.20,000 கோடிக்கு விற்க பிஎஸ்என்எல் சொத்து பட்டியல் தயார்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிதி திரட்ட, அதன் 14 சொத்துக்கள் பட்டியல், முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என, பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நஷ்டத்தில் உள்ளது. 5ஜி அலை வரிசை பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்ய உள்ள நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு இப்போதுதான் அந்த நிறுவனத்துக்கு 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்துக்கு இதன் சொத்து விற்பனை மூலம் நிதி திரட்ட முடிவு திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நிறுவனத்துக்கு நிதி திரட்ட இதன் சொத்துக்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை, திருவனந்தபுரம், ஐதராபாத், காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள 14 சொத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றின் மதிப்பு ரூ.20,160 கோடி எனவும் பர்வார் தெரிவித்துள்ளார்.

Tags : BSNL , Rs 20,000 Crore, Sell, BSNL, Property List, Ready
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு