×

ஜோஷ் பிலிப் அதிரடி ஸ்டிரைக்கர்சை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

காப்ஸ் ஹார்பர்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. சர்வதேச விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஜொனாதன் வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 40 ரன் எடுத்தார். சால்ட், நெசர் தலா 25 ரன், கேப்டன் அலெக்ஸ் கேரி 29, கேமரான் ஒயிட் 18, வெதரால்டு 15, ரஷித் கான் 14* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து வென்றது. ஜஸ்டின் அவெண்டனோ 47, கேப்டன் டேனியல் ஹியூஸ் 24, ஜேம்ஸ் வின்ஸ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 83 ரன் (52 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), டாம் கரன் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். பிலிப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிக்சர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. ஷார்ட் சதத்தில் ஹரிகேன்ஸ் அசத்தல்: பெர்த் ஸ்டேடியத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் நேற்று மோதின.

டாஸ் வென்று பேட் செய்த ஹரிகேன்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. ஜுவெல் 25, மில்லர் 15 ரன்னில் வெளியேறினர். டார்சி ஷார்ட் 103 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் மெக்டெர்மாட் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடினமான இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 48, கேமரான் கிரீன் 33, டிம் டேவிட் 18, லிவிங்ஸ்டோன் 13 ரன் எடுத்தனர். ஜை ரிச்சர்ட்சன் 33 ரன், மேத்யூ கெல்லி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷார்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : Sydney Sixers ,Josh Philippe Action Strikers , Josh Philip, Striker, Dropped, Sydney Sixers
× RELATED போராடி வென்றது சிட்னி சிக்சர்ஸ்