×

2019ம் ஆண்டில் 54 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றம் மரக்கிளை அகற்றுவது தொடர்பான புகாரை தொலைபேசி, இ-மெயிலில் தெரிவிக்கலாம்: மாநகராட்சி அறிவி்ப்பு

சென்னை: கடந்த 2019ம் ஆண்டில் 54 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மரக்கிளைகள் தொடர்பான புகார்களை தொலைபேசி மற்றும் இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலையோரங்களில் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. இந்த மரக்கிளைகளை மண்டலங்களில் பணிபுரியும் பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிப்பார்வையாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அகற்றி வந்தனர்.

அதன்படி கடந்த ஓராண்டில் 54 ஆயிரம் மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மரங்கள் வேரோடு கீழே சாய்வது வெகுவாக குறைந்தாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், மரக்கிளைகள் அகற்றுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரிலோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் 1913 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Thousand Woods ,Removal , In the year 2019, 54 thousand, tree removal, telephone, e-mail, corporation
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...