×

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு: போதை ஆசாமிகள் 3 பேர் கைது

சென்னை: பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஐ.சி.எப் வழியாக பைக்கில் சென்றபோது, அங்கு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. அவர்களை காவலர் கிஷோர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை  தாக்கியுள்ளனர். இதில், கிஷோர் மண்டை உடைந்தது. இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோரை தாக்கிய வில்லிவாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (33), சரண் குமார் (23), ராகேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

* புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் காசிமேடு புதுமனை குப்பத்தை சேர்ந்த சுராஜ் கனி கண்ணன் (26) என்பவரை கத்தியால் கையில் குத்திவிட்டு தப்பிய, காசிமேடு இந்திரா காந்தி நகரை சேர்ந்த மதன் (23), புதுவண்ணாரப்பேட்டை வாஷர் வரதப்ப தெருவை சேர்ந்த விஜய் (22), தண்டையார்பேட்டை இந்திரா காந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (21) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முனியம்மாள் (45) என்பவரை கத்தி முனையில் மிரட்டி ஒரு சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிய தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் தினேஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 ஆட்டோ, 8 சவரன் தங்க நகை, 5 செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

* மண்ணடி பிராட்வே மூக்கர் நல்லமுத்து தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (38) என்பவரின் இரும்பு கடையில் இருந்து ரூ.90 ஆயிரத்தை திருடிய, கடை ஊழியர் பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள செல்போன் சர்வீஸ் கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிய டில்லிபாபு (22), பழனி (23), மணி (20) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
* திருவல்லிக்கேணி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த யானைகவுனி 8வது தெருவை சேர்ந்த முகேஷ் (21), வியாசர்பாடி திடீர் நகர் அப்பு தெருவை சேர்ந்த விஸ்வா (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ெசல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : policemen ,Policeman , Roll, police, skull break, drug addicts, 3 people arrested
× RELATED தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார்...