×

கலசபாக்கம் அருகே ருசிகரம் ஓட்டு போடல்லேயில்லே...பணத்தை திருப்பி கொடு...வீடுவீடாக மனைவியுடன் சென்று கேட்டு வாங்கிய வேட்பாளர்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே பொதுமக்களிடம் ‘நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை. எனவே  பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்று மனைவியுடன் ேவட்பாளர் ஒருவர் வீடு வீடாக சென்று திருப்பி வாங்கிய ருசிகரம் நடந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் அணியாலை ஊராட்சியில் ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இதற்காக வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு ₹500, மூக்குத்தியுடன் ₹600 என  வாரிக் கொடுத்து வாக்கு கேட்டார்களாம்.
இதில் ரூ.500 கொடுத்தவர் வெற்றி பெற்றுள்ளார். ரூ.600 கொடுத்தவர் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்தார்.

 இதனால் தனது, மனைவியுடன் வீடு வீடாக சென்று, ‘எனக்கு ஓட்டு போடவில்லை. எனவே நான் கொடுத்த  பணத்தை திருப்பி கொடுங்கள்’ என வசூலித்தாராம். இதையறிந்த ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து வேட்பாளர் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். மூக்குத்தியுடன் ₹600 கொடுத்தவரும் வெற்றி வாய்ப்பை இழந்ததால், ஒரு சிலர் அவர் வீட்டுக்கும் சென்று திருப்பி  கொடுத்தனர். ஆனால், அவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ‘எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை. திருப்பி தரவேண்டாம். அடுத்த முறையாவது உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளியுங்கள்’ என்று கூறினாராம். இதனால் மனம்  நெகிழ்ந்தவர்கள் கொடுக்கச்சென்ற பணத்தையும், மூக்குத்தியையும் திரும்ப எடுத்துச்சென்றனர்.ஓட்டு போடாததால் தம்பதியர், வீடு வீடாக சென்று பணத்தை திருப்பி கேட்ட சம்பவம் உள்ளாட்சி தேர்தல் முடிவில் சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : candidate ,Rasikaram ,Kalasabakkam ,home ,house , The candidate who went to the house with his wife to ask for a refund ...
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்