×

வேலையில்லை; காசில்லை வரி மட்டும் எப்படி குவியும்?: கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

பாஜ ஆட்சியில் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு போய் விட்டு ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து போய் விட்டது. வளர்ச்சி விகிதம் 4.15 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. அதுவும் இட்டுக்கட்டிய கணக்கு என்று  எல்லாரும் சொல்கின்றனர். இதுவரை 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து விட்டது. 40 வருடத்திற்கு இல்லாத அளவுக்கு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து போய் விட்டது. உள்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் மூடி மக்கள் வருமானத்தை இழந்திருக்கின்றனர். சிறுகுறு நடுத்தர ஆலைகள் மொத்தமும் மூடிக்கிடக்கிறது.வரிவருமானம் ஏன் குறைகிறது என்றால் மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை  கிடையாது.

சந்தையில் உள்ள அனைத்து பொருட்களையும் மக்கள் வாங்குகிற நிலைமையில் இல்லை. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அதற்கு ஆலை மூடல், வேலையில்லாத திண்டாட்டம், விவசாயிகள் கடனில் மூழ்கியிருப்பது  போன்றவையால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. பொருட்கள் விற்றால் தான் வரி வரும். பொருளை விற்காமல் வரி எப்படிவரும்? பொதுவிநியோகத்தை ஒழித்துகட்டுவதற்காக படிப்படியான நடவடிக்கை தான், தமிழகத்திலும் அநேகமாக பல ஊர்களில் உணவு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக கொடுப்பதாக கூறுகின்றனர். அதைப்போன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கான மானியம் வங்கியில் போடுவதாக கூறுகின்றனர்.

மானியத்தைவிட சிலிண்டர் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார பிரச்னையை திசை திருப்புவதற்காக  தான் 370வது பிரிவு நீக்கியது, குடியுரிமை திருத்த சட்டமசோதா கொண்டு வந்து மக்களை திசை திருப்புவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் தான் மக்கள் மதங்களை கடந்து மக்கள்  ஒன்றுகூடி போராடும் நிலை தான் உருவாகியுள்ளது. என்ன தான் ஜாதி, மதம் பேசினாலும் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகள் வரும் போது மக்களை ஏமாற்ற முடியாது.

 ஏன் மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் ஏன் போதுமான பெரும்பான்மை பெற முடியவில்லை. இனிவரும் தேர்தல்களில் படிப்படியாக சரிவை தான் கொடுப்பார்கள் என்பது தான் விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் மக்களை  உலுக்கிக்கொண்டு இருக்கிறது.
ரயில் கட்டணம் உயர்வில் 1 பைசா போல் தான் தெரிகிறது. ஆன்லைனில் டிக்ெகட் புக்கிங் செய்யும் போது சதவீத அடிப்படையில் விலையை உயர்த்துகின்றனர். ₹500 மதிப்பிலான டிக்ெகட் வாங்கும் போது ரூ.40 அதிகம் வாங்குகின்றனர்.  ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, வாங்கும் போது என்ன செலவு ஆகப்போகிறது. சரக்கு ரயில்களில் விலையை உயர்த்திக் கொண்டு தான் இருக்கின்றனர். ஒட்டு ெமாத்தமாக ரயில்வேயை தனியாருக்கு விற்கும் முடிவுக்கு வந்து  விட்டார்கள்.

ஜிஎஸ்டி வரி போட்டதில் நாடு எப்படி நிர்மூலம் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி போட்டதால் என்ன விளைவு உள்ளது என்று அவர்கள் தான் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் இருப்பதால் அவர் ஏற்றுக் கொண்டனர் என்று அர்த்தம் இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஜிஎஸ்டியில் கடை பிடிக்கக் கூடியவை அனைத்தையும்  அவர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. கேரளா மாநில மார்க்சிஸ்ட் நிதி அமைச்சர் தாமஸ் எதிர்க்க வேண்டியதை எதிர்க்கத் தான் செய்கிறார். இனியும் ஜிஎஸ்டி வரி உயரப்போகிறது. உயர்த்தி என்ன பலன்? வேலையில்லை;  கையில் காசில்லை; வரி  வருமானம் மட்டும் எப்படி உயரும்?


Tags : K. Balakrishnan ,Marxist ,Party , Unemployed; How does the tax payable only increase ?: K. Balakrishnan, Marxist Party secretary
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...