×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களின்  மருத்துவ கனவு பறிபோனது. இந்நிலையில் நீட் தேர்வு மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இதற்காக டிசம்பர் 2ம் தேதி முதல் www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பர் 31ம் தேதி  விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 6ம் தேதி (இன்று) இரவு 11.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை இரவு 11.50 மணிக்குள் செலுத்த  வேண்டும்.



Tags : Today is the last day to apply for the NEET Exam
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...