×

மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட நெடிய ஆண்டுகள் நீங்கள் வங்காள மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் சேவையாற்ற திமுக சார்பில் வாழ்த்துகிறேன். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், “ கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்’ என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க  மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது.

இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள்  சந்திப்பு: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்பி தங்கபாலு ஆகியோர் சந்தித்து  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : birthday ,Stalin ,Mamta Banerjee , Stalin's happy birthday to Mamta Banerjee
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!