×

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்...பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையாற்றுவார். இந்த உரையில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம்பெறும். புதிய அறிவிப்புகளும் அதில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. கவர்னர் படித்து முடித்ததும் உரையை தமிழில் சபாநாயகர் தனபால்  படிப்பார். அவர் உரையாற்றியதும் இன்றைய கூட்டத் தொடர் முடிவடையும்.

இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். இன்று கூடும் பேரவை கூட்டம் 10ம் தேதி வரை  தொடர்ச்சியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் நாளை முதல் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும். இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உரையாற்றுவார்கள். பேரவையின் கடைசி  நாளுக்கு முந்தைய நாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவார். இறுதி நாள் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்து பேசுவார். அத்துடன் கூட்டம்  முடிவடையும்.

அதே நேரத்தில் இந்த கூட்டத் தொடரில் மக்கள்

தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்று முன்தினம் விலையிலேயே தங்கம் விற்பனையானது. 2 நாட்களில் தங்கம் விலை வரலாற்று சாதனையை படைத்து மக்களை கலக்கமடைய செய்தது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு  இன்று காலை மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கும். அப்போது அதிர்ச்சிதான் காத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இன்று தங்கம் விலை உயரும். அதுவும் அபரிமிதமாக உயரும் என்று நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை  அளித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய தங்கம் மற்றும் தங்க நகைகள் வர்த்தக சம்மேளனம் மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:அமெரிக்க, ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இன்று தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.  அதுமட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதல் முறையாக தங்கம் விலை இன்று அபரிமிதமாக உயர்ந்து காணப்படும். சவரனுக்கு ₹2,500  வரை உயரும். சவரன் சுமார் 33 ஆயிரத்தை தொடும்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : meeting ,Banwaryal ,Legislative , Legislative meeting convenes today: Governor Banwaryal addresses Prokit ...
× RELATED ஆந்திர மாநிலத்தின் 16வது சட்டப்பேரவை சபாநாயகராக அய்யண்ணபத்ருடு தேர்வு