×

பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியில் அமரும் வரை அனைவரும் உழைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்பதாலேயே திமுக நீதிமன்றத்தை நாடியது என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடந்து இருந்தால் திமுக 85%-க்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

 ஊராட்சி தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு நேரடியாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 271 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 240 இடங்களையும் பிடித்துள்ளன.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது; உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்பதாலேயே திமுக நீதிமன்றத்தை நாடியது.

பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியில் அமரும் வரை அனைவரும் உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமரும். திமுகவின் வெற்றி அதிகரித்தவுடன் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடக்கவிடாமல் செய்தது ஆளுங்கட்சி. நீதிமன்றத்தில் சிசிடிவி ஆதாரங்களை பார்த்தால் நடந்த தவறுகள் தெரிய வரும். ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்றும் அவர் கூறினார். தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பறிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.மேலும் மத்திய அரசின் செயல்பாடுகளால் தொழிலாளர்களின் எதிர்காலம் மீது கேள்விக்குறி விழுந்திருக்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,election , Council election, victory, DMK, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...