×

சைதாப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கணினி பயிற்சி மையம் தொடங்கி பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில் பஜார் சாலையில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கிடையே, ஜனவரி 5-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்க உள்ளார் என திமுக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சைதாப்பேட்டையில் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இந்த சிலை வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல் 5 அடி உயர கிரானைட் தூண் மீது அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். கலைஞர் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூறும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலைஞர் சிலைகள் திறக்கப்படுகின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் தனது தொகுதிகளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மா. சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : MK Stalin ,Karunanidhi ,Saidapet ,DMK , DMK leader, MK Stalin,unveils, bronze statue , Karunanidhi
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...