×

ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110ஆக அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கோட்டா தொகுதியில் உள்ள ஜே.கே.லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு 110 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

கோடா என்ற இடத்தில் செயல்பட்டுவரும் ஜேகே லான் அரசு மருத்துவமனையில் கடந்த  மாதம் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். பாஜ ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் கடந்தாண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க தவறியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக சாடின.

இந்த பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 9 குழந்தைகள் இறந்தன. தேசிய அளவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 110-ஆக அதிகரித்துள்ளது. ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பரிவில் இருந்த குழந்தைகள் இன்று உயிரிழந்துள்ளனர்.


Tags : babies ,Rajasthan ,Kota Government Hospital , Rajasthan's,Kota Government,Hospital,lost,110 babies
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...