×

விடுதியில் இருந்து கல்லூரி மாணவி மாயம் விடுதி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் தர்ணா: திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கல்லூரி பெண்கள் விடுதியிலிருந்து மாணவி மாயமானதால் அஜாக்கிரதையாக இருந்த விடுதி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இடையம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயியின் 22 வயது மகள். இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி சேலம் பகுதியை சேர்ந்தவர் என்பதால். திருப்பத்தூர் தனியார் கல்லூரியின் அருகே உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி மூன்று ஆண்டு காலமாக படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் தந்தை அவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பின்னர் விடுதிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டால் விடுதியில் சரியாக பதிலளிக்கவில்லையாம். இந்நிலையில், நேற்று மாலை திருப்பத்தூரில் உள்ள விடுதிக்கு வந்து விடுதி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மாணவியின் பெற்றோர் மீண்டும் விடுதிக்குச் சென்று தங்கள் மகள் நேற்று முன்தினம் மதியத்திலிருந்து விடுதிக்கு வரவில்லை. இதுகுறித்து நீங்கள் ஏன் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எங்கள் மகள் விடுதியிலிருந்து காணாமல் போய்விட்டார் என்று ஏன் போலீசிலும் புகார் தரவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எங்களது மகள் விடுதியில் இருந்து மாயமானரா அல்லது யாரேனும் கடத்திச் சென்றாரா? அதற்கு நீங்கள் உடந்தையாக செயல்பட்டீர்களா,  பாதுகாப்பை மீறி எப்படி எங்கள் மகள் ெவளியே செல்ல முடியும் என்று கேட்டு விடுதி முன் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parents ,Dharna ,Thiruppathur , Parents,Dharna, Thiruppathur, rages
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்