×

லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது வான்வெளி தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு: 12 பேர் காயம்

திரிபோலி: லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011-ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : air strike ,capital ,Libyan ,Tripura , 28 killed, 12 injured,military air strike,Libyan military ,Qadra
× RELATED உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை...